புதன், 27 ஏப்ரல், 2011

LOKPAL

ஊழல் தடுப்பு சட்டம் (Lokpal Bill) அமலுக்கு வருவதற்குமுன், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது, அப்போது, தமிழக அரசியல்வாதியிடம் பேட்டி எடுப்பதுப்போல்  ஒரு கற்ப்பனை.

பத்திரிக்கையாளர்: ஐயா இருக்காருங்களா?
தொண்டன்: எதுக்கு? 
ப: பேட்டி எடுக்க வந்திருக்கேன்.
தொ: ஐயாகிட்ட முன்னாடியே அனுமதி வாங்கிருக்கியா?
ப: ஆமாம். ஐயாதான் வர சொன்னார்.
தொ: இல்ல, ஐயா ரொம்ப கோபமா இருக்காரு, அதான்.
எவனோ வட நாட்டு கெழவன் உண்ணாவிரதம் இருந்தானு, இவரு டென்ஷன்-ஆ இருக்காரு. செத்தா வயசாகி செத்தான்னு முடிக்கறதவிட்டுட்டு , கெழவன் சொல்றானு சட்டம் எழுதப்போராங்கலாம். நம்ம ஆளுங்க பிரதமரா இருந்திருந்தா இதெல்லாம் நடுக்குமா? பத்திரிக்கக்காரனாச்சே, உனக்குத்தான் தெரியும் இல்ல. என்ன அது?
ப: Lokpal bill-னு, corruption தடுப்பு சட்டம் paass பன்னச்சொல்லி  fasting இருந்தாரு.
தொ: என்ன எழவு bill-ஒ ? நானும் ஐயாக்கிட்ட கேட்டேன். நல்ல தடுப்பு சட்டமா இருந்தா, ஆதரிச்சு, நம்ப தலைவர் பெயர்லயே அந்த சட்டத்த போட்டுடலாம்னு. தலைவர் தண்டபாணி தடுப்புச்சட்டம். பெரும் நல்ல தமிழ் பேரா இருந்திருக்கும். 
சொன்ன உடனே தலைவர் அடிக்கவத்துட்டாரு.
தலைவர் வரார்னு நெனைக்கறேன். பாத்து கேள்வி கேளு. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.
ப: வணக்கம் ஐயா.
அரசியல்வாதி: ம்... எங்க ஆளு என்ன சொல்றான் (பத்திரிக்கைகாரனை பார்த்து).
அதிகமா பெசாதேனா கேட்க்கமாட்டேங்கறான்(chair ஐ. பார்த்து நடந்தபடி)
சரி.... ஆரம்பிப்போம் . (பத்திரிக்கைகாரனை பார்த்து) இந்த சட்டத்தைப்பத்தி பேச எல்லா அரசியல்வாதிகளும் பயப்படற நேரத்தில தைரியமா பேட்டி கொடுக்கிறேனா, என்ன பாராட்டனும்பா. (லேசாக தலையை  குனிந்தபடி)
ப: நிச்சயமா ஐயா. (உடனே ஆமோதித்தான்)
அ: சரி கேளு. (நேராக நிமிர்ந்து)
ப: இந்த ஊழல் தடுப்புச்சட்டம் பாராளுமன்றத்தில அறிமுகப்படுத்தி, வாக்கெடுப்பு நடக்கப்போகுது. நீங்க support பண்றிங்களா, ஐயா?
தொ(மனதுக்குள்): ஊழல் தடுப்பு சட்டமா? அதான் ஐயா இவ்வளவு கோபமா இருக்காரா?
அ: நானும் ஊழலை...
தொ: ஐயா ......? (பதற்றத்துடன்)
அ: டாய் (தொண்டனை அதட்டிவிட்டு), நானும் ஊழலைத்  தடுக்கவேண்டும் என்பதை ஆமோதிக்கிறேன். ஆனால் இதற்க்கென ஒரு சட்டம் தேவையா என்றால், அது தேவையற்ற ஒன்று.
தொ: அமாம்  தலைவா.
ப: இல்லங்கையா, இப்ப நிறைய ஊழல் செய்திகள் வந்துக்கிட்டு இருக்கு. அதை தடுக்க ஒரு கடுமையான சட்டம் கொண்டுவந்தாதான் நல்லா இருக்கும்னு மக்களும் நம்பறாங்க இப்ப.
அ: இதுல இரண்டு கேள்விங்க இருக்கு. ஒன்னு ஊழல் செய்திகள், இன்னொன்று மக்கள் அதை நம்ப ஆரம்பித்தது. எந்த ஒரு அரசியல்வாதியும் ஊழல் செய்வதற்காக அரசியலுக்கு வருவதில்லை. இத்தனை கேஸ்-கள் நடக்கிறதே, இதிலிருந்தே இதற்க்கான சட்டம் ஏற்க்கனவே இருக்கிறது என்பது தெரிய வேண்டாமா?

தொ: ஆமாங்கய்யா, தேவை இல்லாம சட்ட புத்தகத்தில இன்னொரு பக்கம் சேத்துக்குனுமா? 
அ: சும்மா இருடா. (தொண்டனை அமைதிப்படுத்திவிட்டு) இத்தனை வருடங்களாக case நடந்துக்கொண்டிருக்கிறதே ஏதாச்சும் நிரூபிக்க பட்டிருக்கிறதா?
தொ: அதற்குத்தான ஐயா இந்த சட்டம் கொண்டுவரணும்னு போராடறாங்க.
அ: நான் சொல்ல வருவது  என்னவென்றால், நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதிகூட தன்டிக்கப்படக்கூடாது.
தொ: யாரு தலைவா அது?
அ: டாய்.. சும்மா  இரு (கண்டிப்பான குரலில்). அதுவும் மக்களை காப்பாற்றும் எங்களுக்காக சட்டம் முழுகவனத்துடன் செயல்படவேண்டும். இது தன்னார்வத்தொண்டர்கள் அரசியல்வாதிகளின் வளர்ச்சியை பொறுக்காமல் எங்கள் மீது சுமத்தும் பழி. ஏழை மக்கள் சேவைக்காகவே வாழும் எங்களை மக்களிடமிருந்து பிரிக்கப்பார்க்கும் திட்டம். இதை மற்றவர்கள் நம்பினாலும், என் தமிழ் மக்கள் நம்பமாட்டார்கள். இப்போது உன்னுடைய கேள்வியின் இரண்டாவது பகுதிக்கும் பதில் வந்ததா?
தொ: கலக்கிட்டிங்க தலைவா.
ப: சில அரசியல்வாதிகளும் ஆதரிக்கிறார்களே, ஐயா?
அ: அதனுடைய பின்னணி தெரியாமல், சுய விளம்பரதிற்க்காக சிலர் ஆதரிக்கிறார்கள்.
தொ: ஆமாங்கய்யா, இந்த விசயத்தில் தமிழ்நாடு அரசியல் தொழிர்ச்சங்கம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இந்திய அரசியல் தொழிர்ச்சங்கத்திடமும் இதையே வலியுருத்த....
அ: டாய்.. சும்மா இருக்கமாட்ட... சூழ்நிலை தெரியாம பேசிக்கிட்டு.
ப: பிரதமர்கூட ஒத்துக்கொண்டவுடனே தானே இதனை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்?
அ: பிரதமர் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார். பிரதமர் மட்டுமல்ல, அனைத்து மத்தியில் ஆளும்கட்சி உறப்பினர்களும்தான். இருந்தாலும், அதனை மறைமுகமாக தடுப்பதற்கான முயற்சிகளை அக்கட்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அரசியல் சார்ந்தவர்கள் இந்தியாவில் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள்? ஒரு சதவிகதத்திர்க்கும் குறைந்தவர்களா? அதனால்தான் இந்தக்  கூட்டத்தை எதிர்த்து தங்களுடைய கருத்தை நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக தடுக்க நினைக்கிறது.
தொ: ஆமாங்கய்யா. மைனாரிட்டி அரசியல் சமூகத்தின் மேல் சட்டத்தை திணிக்க பார்க்கிறார்கள்.
அ: டாய்  பத்திரிக்கைகாரங்க இருக்கும்போது பெசக்கூடாதுனு எத்தனைமுறை சொல்லியிருக்கேன்.
கடைசியாக தமிழ்நாட்டு மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது  இதுதான், மக்கள் மாக்களாக இருங்கள்.
தொ: ஐயா.......? (பதற்றத்துடன்)
அ: ச்சே.. மக்கள் மக்களாக இருங்கள். உங்களுக்கான அனைத்தையும் அரசு செய்யும். செய்துக்கொண்டுதான் நாங்கள் இருக்கிறோம். சமூக தொண்டர்கள் என்ற போர்வையில் இருந்துக்கொண்டு மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் இதுபோன்ற  செய்திகளை ஆதரிக்காதிர்கள்.
இப்போதுகூட நான் அறிமுகப்படுத்திய கொசுவத்தி திட்டத்தில், ஒரு கோடியே இருபது லட்சத்து நாற்பத்தி ரெண்டாயிரத்து இருநூற்றி எல்ம்பத்தி ரெண்டு பேர் பலனடைந்திருக்கிறார்கள்.
தொ: ஐயா ஆறு பேர் அதிகமா சொல்லிட்டிங்க.
அ: மக்கள் நலனுக்காக, பல கணக்கு போடுகிறேனா, கொஞ்சம் தப்பாயிடுச்சு. என் கூடவே பேசற இடத்துக்கெல்லாம் வரானா? அதான் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான்.
ப: (மனதுக்குள்) உங்க துணைவியார் குடும்பத்தையும் சேர்த்து சொல்லி இருப்பிங்க.
அ: ஏழை மக்களுக்கான திட்டத்தை தடுக்க நினைப்பவர்கள், அதில்கூட ஊழல் நடந்ததாகத்தான் கூறுகிறார்கள். மக்கள் பணி தொடர, மக்களிடம் தடையின்றி போய்சேர இதுபோன்ற சட்டங்கள் வருவதை தடுக்கவேண்டும்.
ப: ஆமாம், சாக்கடைய சுத்தம்பன்னாதிங்க, கொசுவத்தி கொடுங்க. (மனதுக்குள்)
 அ: அவ்வளவுதாம்ப்பா. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நீ கெளம்பு, பிறகு பாக்கலாம்.


தொ:ஐயா இப்பத்தான் உங்க கோபத்தை எல்லாம் கொட்டிட்டிங்கலே. காலையிலிருந்தே சாப்படல, சாப்பட வாங்க ஐயா.
அ: போடா, பசிக்கல.
தொ: கொஞ்சமாச்சி சாப்புடுங்கயா.
அ: போடா, போய் அவர அனுப்பிவச்சுட்டு வா.
தொ: வாப்பா. என்னப்பா நீ? அவருகிட்ட போய் சட்டத்தப்பத்தி கேட்டுக்கிட்டுருக்க. சட்டத்தை பத்தி அவருக்கும் தெரியாது, அதப்பத்தி கவலைப்படவும் மாட்டாரு. எதாச்சு திட்டத்தப்பத்தி கேட்டிங்கனா நல்லா சொல்லியிருப்பாரு. (வாசலை நோக்கி நடந்துக்கொண்டே)
ஒரு நாள், ஒரு கிராமத்த பார்க்க போகும்போது, ஒருத்தன் அவன் பையன்கிட்ட இருந்து சத்துணவு முட்டைய வாங்கி சாப்பிடறத பார்த்துட்டார். உடனே ரேசன் கடையிலேயும் முட்டைய போடலாமேன்னு சொன்னார்.
ப: ஆமாம் அவரு முட்ட போடலாம். (அமோதிப்பதுபோல்). ஜெயில்லே இருக்கரவனுக்கே சிக்கன் போடறோம், வெளியிலேருக்கரவங்களுக்கு முட்டையாவது போடனும்.
தொ: அதவிடு, ஒரு நாள் பிச்சைகாரன் ரோட்ல கஷ்டப்பட்டு தூங்கரத பார்த்துட்டு, ஏன், உடனே ஒவ்வொரு முக்கியமான நகரத்தின் சந்திப்பிலும் தலையனையுடன்கூடிய தரைவிரிப்பு போடக்கூடாதுன்னு? கேட்டாரு.
ப: ஏன் வேற எதாச்சும்  கொடுக்கலாம்னு சொல்லலியா? (அலுப்புடன்)

தொ: (உடனே)  ம்ம்.... அவங்களுக்கும் ஓட்டு உரிமை கொடுக்கலாம்னு சொன்னார்.  
ப: ஹ்ம்ம். உங்க தலைவர் போல யாரும் யோசிக்கமுடியாது. (பெருமிதமாக சொல்வது போல்)
(பிறகு மனதுக்குள் அலுப்புடன்) ஏன் அவங்களுக்கும் ரேசன் கார்டு கொடுத்து, மக்களோடு சேர்ந்து இலவச பொருட்களை வாங்கிக்கொள்ள சொல்லலாம் இல்லையா?
தொ: இதப்போலத்தான் என்ன என்ன மக்கள் நலத்திட்டங்கள் கொண்டுவரலாம்னு யோசிச்சிக்கிட்டே இருப்பார். இந்த திட்டத்தை எல்லாம் வெளிய சொல்லிடாதிங்க. ஏற்கனவே இலவச கொசுவத்தி திட்டத்தை சொன்னதும், எதிர்கட்சிக்காரங்க இலவச allout தரோம்னு copy அடிச்சி சொன்னாங்க. தலைவர் சொல்றவரைக்கும் பொருத்திருங்க.
ப: (மனதுக்குள் எரிச்சலுடன்) இத நான்வேற வெளிய சொல்றேன்.
தொ: சரி போய் ஒழுங்கா எழுதுங்க. உங்க பத்திரிக்கை ஆபீஸ் நல்லதுக்குத்தான் சொல்றேன்.
அ: டேய். இவ்வளவு நேரமா? (உள்ளிருந்து குரல் வர)
தொ:
தோ, வந்துட்டேங்கய்யா. சரி நீ கேளம்புப்பா. சொன்னது ஞாபகம் இருக்கட்டும்.
வாங்கய்யா இப்பவாவது சாப்படலாம்.
அ: நீ போய் சாப்புடுடா. எனக்கு பசிக்கல.
தோ:
இப்படி சாப்படாம இருப்பிங்கனு முதல்லயே தெரிஞ்சிருந்தா, எதுக்காகவாவது உன்னாவிரதமாச்சு இருந்திருக்க்கலம். (என முனுமுனுத்துக்கொண்டே நகர்ந்தான்.)
அ: அந்த கொசு வத்தி company காரங்க வந்திருந்தா அனுப்பிவச்சுட்டு போ?
தோ:
இன்னும் வரலிங்கய்யா. அதுக்குத்தாங்கய்யா, என்பெர்லயே பினாமியில ஒரு company ஆரம்பிச்சு நமக்கே contract கொடுத்திருக்கலாம்னு சொன்னேன்.  தேவை இல்லாம மூணாவது மனுசன எல்லாம் உள்ள கொண்டுவந்து...
அ: எல்லாம் எனக்கு தெரியும். போ. அப்புறம் பாக்கலாம்.