சனி, 30 ஜூன், 2007

கடைசியில் ஒரு திருத்தம்

கடைசியில் ஒரு திருத்தம்
மண் ஆசை. விபரம் தெரிய ஆரம்பித்ததும் பொதுவாக அனைவருக்கும் வரும் ஒன்று. அதற்க்கு முன்னும் பலருக்கு தோன்றும், அதை அடைவதர்கான முழு தகுதி இல்லாமலேயே. அது வசதி படைத்தவர்கலுக்கு பெரிய விசயமாக இருப்பதில்லை. சிலர் நிலத்தை வாங்கி, பின்பு கை மற்றிவிடுவதை பொழுது போக்காகவே செய்தனர். தன் சொந்த்த உழைப்பில் ஒன்றாவது ஈட்டவென்டும் என்ற குறிக்கொல் எனக்கும் இருந்தது. ஆனால் எந்த வயதில் என் மனதில் உதயமானது என்பது என்னால் கணிக்க முடியவில்லை.

சிலவற்றை பார்க்கும் போது இது கிடைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றும். ஆனால் கண்ணில் படும் அனைத்து விற்பணை இடங்களையும் அடையும் எண்ணம் என் மனதில் இறுந்தது. முதலில் நானும் சில வறைமுரைகள் வைத்திருந்தேன். பின்பு நானும் தளர்த்திக்கொண்டேன். இப்பொது ஏரக்குரைய எந்த வரைமுரையும் இல்லாமலே பொய் விட்டது.

எனக்கென சில கட்டுபாடுகலும் வைத்திருந்தேன். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடையது தவிர மற்றதின் மேல் கவனம் செலுத்துவது என்று. இதை மட்டுமே என்னால் இன்று வரை கடை பிடிக்க முடிந்தது..

முதலில் என்னை ஆசை அற்றவன் போல் காட்டிக்கொண்டு இருந்தேன். அதர்க்கான முழு காரணம் நானும் என்னுடைய சூழ்நிலையும். தேவை அற்ற முயர்ச்சி என்று நினைத்துக்கொண்டு அதில் இருந்து தள்ளியே இருந்தேன். ஒரு கட்டத்தில் அது என்னில் இருந்து வெளிப்பட்டு என்னை காட்டி கொடுத்தது. இந்த திடீர் மாற்றத்துக்கான காரணங்கலை தேட அரம்பித்தேன். இது எனக்கான ஆராச்சி அல்ல, அடுத்தவர் கேட்பதர்க்கு சொல்வதர்க்கான பதில்.

எப்படி ஆரம்பிப்பது என யொசித்ததில், நகரத்தில் தேடுவது என் தகுதிக்கு அப்பாற்பட்டது என்பது எனக்கே தெரிந்த ஒன்று. அதனால் கிராமத்து பக்கம் என் கவனம் திரும்பியது அதுவும் எனக்கு பரிட்சயமான எங்கல் ஊரிலேயே.ஏதாவது ஒன்றின் மீது கவனம் செலுத்தி அதனை பெருவது என, என் குறிக்கோலை நேர் படுத்தினேன். அப்பொது ஒரு பேருந்து பயணத்தில் என் பார்வையில் பட்டது ஒரு பயிர் இடுவதர்க்கு தயராக இருந்த அந்த நிலம்.

அதன் மீது எனக்கு ஈர்ப்பு வந்ததன் காரணம், என் தேடலின் ஆரம்பத்தில் பார்த்த ஒன்று என்பது மட்டுமே. பின் அதனை பற்றி விசாரிக்க அரம்பித்ததில் அது என் நண்பனுடையது என்று தெரிய வந்தது. என் சுய கட்டுப்பாட்டில் இப்படி ஒரு சருக்கல் ஏர்ப்பட்டது. இதில் என் ஆசை கட்டுப்பாட்டை ஏர்க்க மருத்தது. எனவே முன்பு போல் முடிவை முதலில் எடுத்துவிட்டு, ஏன் இந்த முடிவு எடுத்தேன் என்று சொல்ல காரணங்களை பிறகு சேகரிக்க ஆரம்பித்தேன். அதில் எளிதாக கிடைக்க கூடிய ஒரு காரணம் முதலில் கண் முன் தோன்றியது. இது இப்ப எல்லாம் சகஜம்- தடம் மாற்றத்தின் முதல் படி.

என் விருப்பத்தை சிலரிடம் பகிர்ந்து கொள்ள அரம்பித்தேன். பலர் இந்த ஊருல எதுக்குப்பா நகரத்துல பார்க்கலாம் என்றனர். எனக்கொ இங்கு கிடைப்பதே பெரிய விசயமாக இருக்கிறது, எங்க அங்க எலலாம் போயிட்டு.. என தொன்றியது. சில கைமற்றுக்காரர்கள் அவர்கள் வழிக்கு என்னை அழைத்தனர். என் விருப்பத்தை சிலர் எதிர்க்கவில்லை, அதுவும் எனக்காக. நான் என் முடிவில் இருந்து பின்வாங்குவது இல்லை என இருந்தென்.

இதில் நிலத்து காரர்கலுக்கே இதில் விருப்பம் இல்லை என்பது மறுபுரம். அதனை பெற வெண்டும் என்ற என்னுடைய நோக்கத்தால் சில இன்னல்கலை நானாகவே ஏற்றுக்கொண்டேன். இருந்தும் கிருக்கனாக பல நாட்க்கள் அதர்க்காக அலைந்து ஒரு கட்டதில் அதிலுருந்து முழுவதுமாக விடுபட்டென். பின் என் கொள்கைகளை மாற்றி அமைத்துக்கொண்டேன். வறைமுறை இன்றி பல இடங்கலை பார்க்க ஆரம்பித்தேன். அதில் விர்பனைக்கு வர முடியாத சில விலை நிலங்கலும் அடங்கும். பார்த்துவிட்டு அதனை எப்படி பயன்படுத்தலாம் என கர்பனை கனவு கான்பதொடு என் தெடல் முடிந்துவிடும். எதையும் வாங்குவதர்கான அடுத்த முயரற்ச்சியை என்னால் எடுக்க முடியவில்லை. அதற்காக பலரிடம் ஆலோசனை கேட்டதும் உண்டு.

அடுத்த கட்டமாக மின் வலையில் தேடுவதென்று முடிவெடுத்தேன். உண்மையில் மின் வலை ஒரு சுரங்கம். அதில் அனைத்தும் பாகுபாடின்றி கொட்டிக் கிடந்தது. நண்பர்களுக்கு தெரியாமல் மாற்று பெயருடன் தெடுதலை ஆரம்பித்தென்.
அதில் புகைபடத்துடன்கூடிய விளம்பரங்கலும் இருந்தது. அந்த விளம்பரங்கலை பார்த்துவிட்டு அதர்க்கான தகுதியும் இல்லாமல், சினிமா பார்க்க முடியாதவன் ட்ரைலர் பர்த்துவிட்டு திருப்தி அடைவதை போல என்னையும் சமாதான படுத்திக்கொண்டேன்.

இந்த இயந்திர வாழ்க்கையில் தனிமையில் கனவுகான ஒரு சிறந்த இடம் குளியலறை. என் ரூமில் குளியலறையும் கழிவரையும் ஒண்ராக இருந்ததால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. சில நேரங்களில் என் நண்பர்கள் கதவை தட்டும் பொது, அவர்கல் அவசரம் தேரிந்தும் எரிச்சலாக இருக்கும்.என் குளியலறை கண்ணாடி பல நேரங்கலில் 'இவனுக்கு வேறு எண்ணமே தோன்ரதா' என திட்டுவது பொல் தோன்றும். சில நேரங்கலில் 'இவன் ஆசை நிறைவேரக்கூடாதா' என எனக்காக
பரிதாபப்படுவதுபோல் தோன்றும்.

பேருந்து பயணங்களில் சில அத்து மீரிய ஆக்கரமிப்புக்களை பார்க்க நேரிடும். அதில் சில யாராலும் கண்டுகொள்ள படாமல் விட்டுவிடப்படும். இதனை கைதேர்ந்தவர்கலால் மட்டுமே அறிந்துகொண்டு செய்ய முடியும். சில அவமானத்தில் முடியும். அந்த பயத்தினால் அந்த கேவலமான விசயத்தையும் செய்வதில்லை.

கலைங்ஞரின் நிலமற்ற விவசாயிகலுக்கு இரன்டு ஏக்கர் நிலம் என்ற சட்டத்தை கேட்ட போது, நம்மை பொன்றவர்க்கு ஒன்று என்றாவது ஒரு சட்டம் வரகூடாதா என தோன்றியது. நம் பெற்றோர்கள் எப்படியும் நம்மை கை விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை மட்டுமே கடைசியில் எனக்கு ஆறுதல் அளித்தது.

இது
உண்மையில் என் மண் ஆசை அல்ல. ......

-ஸ்ரீதரன்.

1 கருத்து:

Unknown சொன்னது…

It was interesting in beginning but the end was not that much impressive. Need to concentrate more in finishing the story. Good attempt