வியாழன், 23 ஜூன், 2011

அன்பு ஒலி

கிட்னி failure. இரண்டும் இருபத்தி எட்டு வருடத்திலேயே பழுதடைந்துவிட்டது. பேரதிர்ச்சி அவனுக்கு. நல்லவங்களுக்கு ஏன்தான் இப்படி நோய் எல்லாம் வருதுன்னு தெரியல -என சில பேர். எல்லாம்  ராஜேந்திரன் அப்பா செஞ்ச பாவம் - என சில பேர். அடுத்தவர்களின் பேச்சில் நம்பிக்கை இல்லாதவன், உடலை சரியாக பார்த்துக்கொள்ளாதது நமது தவறுதான் என்று காலம் கடந்து புரிந்துக்கொண்டான். இப்போது உடல் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதில், அவனுக்கு இன்னும் வாழ்நாள் இருப்பதாக நம்பிக்கை வந்தது. பல மருத்தவமனைகளை அணுகியும் அவனுக்கேற்ற கிட்னி கிடைக்கவில்லை. செலவு செய்ய பணம் இருந்தும் அப்போதைக்கு உபயோகப்படவில்லை. விளம்பரம் செய்துப்பார்த்தான். இப்போது மக்கள் தன் தேவையை பூர்த்திசெய்துக்கொள்ளும் அளவிற்கு சம்பாதிக்கும் வழிகள் பல வந்துவிட்டது. யாரும் பிழைப்புக்காக உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவதுமில்லை, உயிருடன் இருக்கும்போது இரண்டில் ஒரு உறுப்பை தைரியமாக கொடுக்கும் அளவிற்கு பெரிய வள்ளலாகவும் இல்லை. ஆனால் அவனுடைய அப்பாவுக்கு விளம்பரம் மூலம் செய்தி சென்றடைந்தது.

அப்பாவின் கட்டப்பஞ்சாயத்து வாழ்க்கையை வெறுத்து வீட்டைவிட்டு தனியாக வந்திருந்தான். ஒரே மகனை பிரிய நேரிட்டாலும் நாகேந்திரனுக்கு அந்த வாழ்க்கையை விட்டு வெளியே வர விருப்பமில்லை. எப்படியும் மகன் நன்றாக இருக்கிறான் என்ற நம்பிக்கை.

மகனின் வீட்டுக்கு வந்து, மகனால் திருப்பி அனுப்பப்பட்டவன், என் பையனுக்கு இவ்வளவு பெரிய கஷ்டம் வந்திருக்கு என்ன கண்கானிக்கிரிங்க? பத்திரிக்கையை பார்த்து நானே தெரிஞ்சிக்கவேண்டிருக்கு என கோபப்பட்டான். அந்த அளவிற்கு கோபப்பட்டு அவனுடைய அடியாட்கள் பார்த்ததில்லை. எதிரியை கொல்வதாக இருந்தாலும் கூலாகத்தான் முடிச்சுடுனு சொல்லுவார்.

பிளான் செய்வதில் பதற்றம். இதுபோல விஷயம் புதிதாக இருந்தது. கொன்றுவிட்டு வருவதென்றால் பரவாஇல்லை. கொலை செய்து கிட்னியை எடுத்துக்கொண்டு வரவும் முடியாது. மருத்துவரை மிரட்டி செய்ய சொன்னாலும் அவனுடிய மகன் அப்படியெல்லாம் வாழ்வதற்கு இறந்தே போய்விடுவான் .

மகன் விசாரித்த சில மருத்தவமனைக்கு சென்று விபரங்களை சேகரித்தான். அவனுடைய blood group-ஐ சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால்தான்  கிடைக்கும் என்பதை புரிந்துக்கொண்டான். மருத்துவரை மிரட்டி தன் மகனின் blood group-இல் உடல் தானம் செய்தவர்கள் பட்டியலை வாங்கினான். மூன்று பேர் இருந்தார்கள். ஒரு பெண். கொலை செய்வது சுலபமாக இருந்தாலும், அனுதாபத்தில் பலர் கூடிவிடுவர். சிக்கலான விஷயம். அடுத்தது வயதானவர். அவருடைய கிட்னி எந்த அளவுக்கு வேலை செய்யும் என தெரியவில்லை. அடுத்தது கல்யாணம் ஆகாத இளைஞன். குடும்பத்தை விட்டு நகரத்திற்கு வந்து வேலை செய்யும் கல்யாணமாகாத இளைஞன். மூன்றில் நல்ல சாய்ஸ், இவன்தான்.

ஆள் தேர்வு முடிந்தது. accident போல இருக்கவேண்டும், மரணம் நேராத அளவிற்கு இருக்க வேண்டும். ஆனால் சில மணி நேரத்தில் மரணமடையவேண்டும். என முடிவெடுக்கப்பட்டது. பொருள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். கூட்டமாக போகவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நால்வர் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டனர். அந்த இளைஞன், இருசக்கர வாகனத்தில் வேலைக்கு போவது சாதகமாக இருந்தது. இருவர் car-ஐ மோதி தூக்குவது. மற்ற இரண்டு பேரும் வேறொரு car-ல் அங்கிருந்து மருத்துவமனைக்கு தூக்கிவருவது என்று.

பிளான்படி முடிக்காமல் தோல்வியுடன் திரும்பி வந்தனர். என்ன பன்றிங்கனே தெரியல?... உங்கள எல்லாம் .....? என் மகன் செத்துக்கிட்டு இருக்கான்... இல்லைங்கையா அவன் சாவுக்கு பயந்தவன் போல வண்டி ஓட்றான். close-அ போனோம் சுதாரிச்சுட்டான். உங்கள நம்ப முடியாது. சில நேர அமைதிக்கு பிறகு, நானே போறேன் என்றார். ஐயா வேணாங்கய்யா - பதற்றத்துடன் கூட்டமாக. எவ்வளவு பெரிய கொலை எல்லாம் பண்ணியிருக்கோம், இப்ப ஏதோ மிஸ்-ஆகிடுச்சு. உங்க பழைய கதை எல்லாம் வேண்டாம். இதுவரைக்கும் எப்படி பண்ணிங்கன்றது முக்கியமில்லை. உங்கள அனுப்பிட்டு திரும்ப இதே போல பதிலை கேட்க்க முடியாது. அதே ப்ளான்-தான் நான் தூக்கரேன் பின்னாடியே வந்து அள்ளிடுங்க.

அந்த இரவிலேயே இன்னொரு plan உருவானது. மகன் தானா செத்துடுவான், இவனுக்கு அப்புறம் நாம்ப பார்த்துக்கலாம்னு நெனைச்சா...? என மகனை கண்காணித்த பீட்டர் ஆரம்பிக்க. அவனோடு ஒத்துப்போன சிலரும் ஆமோதித்தனர். இப்பவும் ஒன்னும் இல்ல அப்பனோட ப்லான்லயே அவனையும் தூக்கிடலாம். இன்னும் சீக்கிரமா முடிஞ்சுடும். அந்த இளைஞனின் பின்னால் லாரியில் வந்து காரோடு தூக்கிடலாம் என முடிவெடுக்கப்பட்டது.

வளைவில் தயாராக இருந்தது car.  இளைஞன் வருவதை அறிந்து, காரை நாகேந்திரன் உருமச்செய்துக்கொண்டிருந்தான். குறிப்பிட்ட தூரத்தில் வந்ததும் கியரை போட்டு தூக்க, இளைஞன் லாரியின் horn சத்தம் கேட்டு ஒதுங்கி வழிவிட, சில வினாடிகளில் எல்லாம் நடந்து முடிந்தது. முதல் சதி தோல்வியடைந்தது. இரண்டாவது சதி ஓரளவிற்கு வெற்றிபெற்றது. இளைஞன் ஆபத்தின்றி தப்பியிருந்தான். நாகேந்திரனின் கவிழ்ந்த காரிலிருந்து இளைஞனை பார்த்துக்கொண்டிருந்தான். தோல்வியை எண்ணி தன்னை தானே நொந்துக்கொண்டு கீழே பார்த்ததில் காரின் ஒரு சிறு துண்டு அவன் அடி வயிற்றை கிழித்திருந்தது. ரத்தத்தை பார்த்துக்கொண்டே மயக்கத்திற்கு போனான்.

lorry நிற்காமல் சென்றுவிட்டது. நாகேந்திரனின் அடியாட்கள் அவனை காப்பாற்ற வருவதற்குள், அந்த இளைஞன், கார்-ஐ நெருங்கி மயங்கிய நாகேந்திரனை வெளியெடுத்து ஆட்டோவில் தூக்கிக்கொண்டு மருத்துவமனையை அடைந்தான். 

நீங்க யாருங்க என மருத்துவர் கேட்க்க, நான் முருகன் என அந்த இளைஞன் சொல்ல, இல்லைங்க, இவருக்கு என்ன வேண்டும் என மருத்துவர் கேட்க்க, நான் வழியில் வந்தேன், அடிப்பட்டுக்கிடந்தார் என சொல்லி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவிட்டு, நான் ஆபீஸ் வேலையாக போக வேண்டிருக்கு, சாயங்காலம் வருகிறேன் என சொல்லி அங்கிருந்து முருகன் கிளம்பினான்.

நாகேந்திரனின் அடியாட்கள் அவனை தேடிவருவதர்க்குள் மதியமாகிவிட்டது. உயிருக்கு ஆபத்தில்லை, ஒரு கிட்னிதான் போய்விட்டது என மருத்துவர் சொல்ல, சிலரிடம் சோகம், சிலரிடம் சந்தோசம், சிலரிடம் இரண்டுக்கும் நடுவில் என அனைத்தும் ஒவ்வொருவரின் மனதிலும் இருந்தாலும், சோகத்தை மட்டும் வெளிக்காட்டிக்கொண்டு நின்றார்கள். நாகேந்திரனை பார்த்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை தொலைபேசிமூலம் அறிந்துக்கொண்ட முருகன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என அன்று சாயங்காலம் வரவில்லை.

பலரின் வற்புறுத்தலுக்காக பல நாட்கள் கடந்து, அப்பனை பார்க்க மருத்துவமனைக்கு கிளம்பினான் ராஜேந்திரன். அதில் ஒரு அடியாள் accident-க்கான காரணத்தை சொல்லி இருந்தான். கோபம் தலைக்கேறி அப்பனை பார்க்க போனான்.

அப்பனை பார்த்தவுடன் மனம் ஏனோ சட்டென மாறிவிட்டது. கோபம் மறந்து கண் கலங்கிற்று. அப்பனுக்கு அவன் முன்னாள் இருக்க குற்ற உணர்ச்சி இருந்தாலும், பாசம் அவன் முன்னாள் கண் கலங்க செய்தது. ராஜேந்திரன் அழுகையை ஒளித்து கோபத்தை வெளிக்கொண்டுவந்தான். இதுவெல்லாம் புடிக்காம தானே உங்கள விட்டு வந்தேன். இப்படி எல்லாம் நான் உயிர் வாழ்வேன்னு நம்பரிங்களா? இதுக்கா நான் டயாலிசிஸ்-பண்ணி உயிரை பிடித்துவைக்கணும்? இதுபோலவெல்லாம் நடக்கவா? சேத்துப்போறேன். இல்லப்பா... சமாதானமாக நாகேந்திரன் பேச முயலும்போதே வெளியேறினான்.

மருத்துவமனையில் சேர்த்ததுக்கு அப்புறம் வெகு நாட்கள் கழித்து நாகேந்திரனை பார்க்க வந்த முருகன், மருத்துவரை பார்த்துவிட்டு நாகேந்திரனை பார்க்க வந்துக்கொண்டிருந்தான். முருகனை பார்த்ததும் அறைக்கு வெளியில் இருந்த அடியாட்கள் சிறிது பதுங்கினாலும், உடனே சுதாரித்துக்கொண்டு தெரியாத ஆளைப்போல நடந்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.  முருகன், வெளியே வந்துக்கொண்டிருந்த ராஜேந்திரனிடம், நீங்க தான் அவருடைய மகனா?  அமாம் என ராஜேந்திரன் தலையாட்ட, மருத்துவர் நீங்க வந்திருப்பதாக சொன்னார். உங்க அப்பா ஒரு கிட்னியை accident-இல் இழந்துவிட்டார் என்று சொன்னார். sorry sir. ராஜேந்திரன் - பரவா இல்ல sir. முருகன் - கொஞ்சம் பத்திரமா பார்த்துக்குங்க சார். பாவம் வயசானவர்.

ராஜேந்திரன் பின்னாலேயே சமாந்தனப்படுத்த வந்த நாகேந்திரன், முருகனை பார்த்து கதவோரம் லேசாக பதுங்கி நின்று கேட்டுக்கொண்டிருந்தான். முருகன் - உங்களுக்குள்ள பிரச்சனை, இப்பதான் பார்க்கவே வந்திங்கன்னு கேள்விப்பட்டேன். முடியாதவரு, பிரச்சனை எல்லாம் மறந்துட்டு கொஞ்சம் அவர பார்த்துக்குங்க. ராஜேந்திரன் - அவரப்பத்தி தெரிஞ்சா அப்படியெல்லாம் பேசமாட்டிங்க.  அவரப்பத்தி எத்தன வருசமா உங்களுக்கு தெரியும்? முருகன் - இல்லைங்க நான்தான் அவர மருத்துவமனையில சேர்த்தேன். நாகேந்திரனுக்கு லேசானஅடி விழுந்ததுபோல் இருந்தது.

ராஜேந்திரன் சட்டென, அவரப்பத்தி தெரிஞ்சிருந்தா காப்பாத்தி இருக்கமாட்டிங்க.  முருகன் - இல்லைங்க என்னதான் இருந்தாலும் ... முருகனை தொடரவிடாமல் ராஜேந்திரன், எனக்காக யாரையோ கொலை பண்ண போயிருக்கிறார், இதெல்லாம் பார்க்க சகிக்காம தான் எங்க அம்மா உலகத்தவிட்டே போய்ட்டாங்க. நானும் அவரைவிட்டு வந்தேன். இல்லைங்க, தழுதழுத்த குரலுடன் ... முருகன் கொலை என்ற வார்த்தையை கேட்டவுடன் பேசமுடியாமல் நின்றான். ராஜேந்திரன் தொடர்ந்தான் - எனக்கு கிட்னி failure-ங்க. என்னோட blood group கிட்னி எங்கயும் கிடைக்கல. நம்ம வயசுல யாரோ ஒருத்தன் உடல் தானம் பன்னவன கொன்னு என்ன காப்பத்தலாம்னு நெனைச்சு கொலைப் பண்ண போன இடத்துல இவருக்கு accident ஆகி இருக்கு. எனக்கு இப்பவெல்லாம் கடவுள் நம்பிக்கை இல்ல. கடவுள் இருந்திருந்தா இந்த accident-லயே , அவர கொன்னு இருப்பாரு.

நாகேந்திரனுக்கு மகனின் வார்த்தைகள் பலமாக தெரிந்தது. அவன்மீது இவ்வளவு வெறுப்பு இருக்கும் என்பது இப்போதுதான் உணரமுடிந்தது. மற்றொருபுறம் - முருகனால் ஊகிக்க முடிந்ததால், அவன் முகத்தில் ஏதேதோ உணர்ச்சிகள் மாறி மாறி வந்துக்கொண்டிருந்தது. ராஜேந்திரன், முருகன் குழன்புவதை பார்த்து, இப்போதாவது புரிந்திருப்பிர்கள் என நெனைக்கிறேன், என சொல்ல. சில நேர அமைதிக்கு பிறகு, முருகன், அவர் கொல்ல நினைத்தது நான்தான் என சொல்ல. மகனின் கோபம் அதிகமாகி, அப்பனிடம் அவனை அழைத்து செல்ல முயல, கதவோரம் நின்றிருந்த நாகேந்திரன் முதல் முறையாக குற்ற உணர்ச்சியில் குறுகி இவர்களை நோக்கி வார்த்தை வராவிட்டாலும், அவனது கால்கள் நகர்ந்து வந்துக்கொண்டிருந்தது.

ராஜேந்திரன், பாருங்க நீங்க கொல்ல நேனைச்சவன்தான் உங்களையே காப்பாத்தி இருக்கார். உங்களுக்கெல்லாம் ... அந்த அளவுக்கு திட்ட வார்த்தை இல்லாததால் நிறுத்திக்கொண்டான்.

முருகன் - பழச மறந்துடுங்க என ஒரு முடிவுக்கு வந்தவனை போல், எனக்கும் மூலையில ப்ளூட் clat ஆகி இருக்கு. சில மாதங்களில் நானே செத்துடுவேன். நான் இறந்து என் உறப்புகள் மூலம் பல பிறவி எடுக்கனும்னு நினைத்துக்கொண்டிருந்தேன். உயிருடன் இருக்கும்போதே தொடங்கிவிடுவதுதான் நல்லது என நெனைக்கிறேன். என்னுடைய ஒரு கிட்னியை தருகிறேன். நீங்க எடுத்துக்கோங்க.

மகன் வாயை திறப்பதற்குள், அப்பன் - வேண்டாயா, உன் கிட்னிய கொடுத்து என்னோட குற்ற உணர்வ அதிகமாக்கிடதிங்கய்யா. நானும் என் பையனோட blood குரூப்தான். என்னோட கிட்னியை கொடுத்துட்டு, நான் செத்து போறேன். 

இல்லங்கய்யா அப்படி எல்லாம் பேசக்கொடாது, என முருகன் சொல்ல. நாகேந்திரன், இல்லப்பா, நான் வாழ்ந்தேனா, பலருக்கு ஆபத்துதான், உங்கள போல நல்லவங்க இருந்தா பல பேர் உயிர் வாழ்வாங்க. முருகன் - இல்லைங்கையா எனக்கு நல்ல சாவு வந்துடுச்சுனா அது பல பேருக்கு உதவும். இதைப்போல கேட்ட சாவு வந்தா நானும் செத்து என்னுடைய உறுப்புகளும் செத்துட வாய்ப்பிருக்கிறது. நானும், உயிரோடு இருக்கும் போதே தானம் செஞ்சு, என்னால் ஒருவர் உயிரோடு வாழ்வதை பார்க்கற பாக்கியமும் கிடைக்கும்.

நாகேந்திரன் - இல்லப்பா நீ உயிரோடஇருக்கணும். நல்லவங்களுக்கெல்லாம் எதுவும் ஆகாது. என்னோட பாவத்துக்கு நான் பலன் அனுபவிச்சே ஆகனும். என்னோட ஒரு கிட்னியும் கொடுத்துட்டு இறந்திடறேன். முருகன் - இல்லைங்கையா, திருந்தனவன் நல்லவனைவிட நல்லவனாத்தான் இருப்பான். உங்க பாவத்துக்கு பரிகாரம் இறப்பு அல்ல. நீங்க நிறைய நல்லது செய்ய வேண்டி இருக்கு. நானும் உடனே சாக போறதில்ல. என்னோட வாழ்நாளுக்கு ஒரு கிட்னி போதும்....

சோகம், செண்டிமெண்ட், மகிழ்ச்சி  என கலந்து ஓடி, கடைசியில் மூவரும் ஆளுக்கொரு கிட்னியுடன் புதிய வாழ்க்கைக்குள் நுழைந்தனர்.

உடல் தானம் செய்யுங்கள். உங்கள் இறப்புக்கு பின் உங்கள் உறுப்புகளாவது வாழட்டும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Another great article with a good intention.

I hope organ donation picks up big deal....