சனி, 21 ஜூலை, 2007

சின்ன முதலாளி

[When I was working in chennai (in the time of 2007), I got the chance to watch from the starting to completion of the independent house construction and its house warming ceremony (which was near by my room). One of the family stayed construction place itself and worked till the end - as a watchman cum house constructor ("Sitthal"). I like to share their son experience here]

அவன் பள்ளி விடுமுறைக்கு அவன் பெற்றோர்களிடம் வந்து இருந்தான். அவனுடைய ஆறு வருச வாழ்க்கையில் அவன் பால் மறக்க கூட பெற்றோரை இந்த அளவுக்கு பிரிந்தது இல்லை. ஒரு மாதம் தன் பாட்டியுடன் இருந்த அவனுக்கு தன் பெற்றோர்களிடம் வந்ததும், அவனுக்கு தனி கவனிப்பு இருந்ததில் ஆச்சர்யம் இல்லை.

பல சலுகைக்கு இடையில் அவனால் சில நாட்க்கள் மட்டுமே சந்தோசமாக இருக்க முடிந்தது. அவன் பெற்றோர்களும் முழு நேர வீடு கட்டும் பணியில் இறங்கிவிடுவர். அவனுக்கு விளயாடுவதர்க்கு துணை இல்லாமல் சலிப்பு ஏற்பட்டது. மகனின் மனதை நன்கு அறிந்த அப்பா, அவனுக்கு சில விளையட்டு பொருட்க்கள் வாங்கி தந்தார். அவனும் அங்கு கைக்கு அடக்கமாக உள்ள பொருட்களை எல்லாம் விளையாட்டு பொருளாக மாற்றிக் கொண்டு இருந்தான். தனிமையில் விளயாடவும் பழகிக்கொண்டான். அவன் தாய்க்கு அதை மேற்பார்வை இடுவது ஒரு கூடுதல் வேலை ஆனது. ராட்சச மிருகங்கள் நிறைந்த hollywood படங்களின் படபிடிப்புக்கு இணையாக அவன் தனிமை விளையட்டு இருக்கும்.

புது வீட்டின் மாடியில் ஏறுவது என்றால் அவனுக்கு பயம். படிக்கட்டுகள் கைப்பிடி இல்லாமல் இருக்கும். வீட்டிலும் மிரட்டியே வைத்திருந்தனர்.எப்போதாவது அவனுடைய அப்பா அவனை மேலே அழைத்து செல்வார். அவரும் அவனை மேலே அழைத்து செல்ல கொஞ்சம் யோசிப்பார். அவனுடைய பாதுகாப்பை அவரால் சுலபமாக பார்த்துக்கொள்ள முடியும், ஆனால் அவனுடைய கேள்விகலுக்கு பதில் அவ்வளவு சுலபமாக சொல்ல முடியவில்லை. மாடியில் இருந்து பார்ப்பதால் அவன் கண்னுக்கு கேள்வி கேட்பதர்க்கு நிறயவே தெரிந்தது. நிமிர்ந்தே பார்த்துக்கொண்டு இருந்த அவனுக்கு, மாடியில் இருந்து குனிந்து கீழே உள்ளவர்களை பார்க்கும் போது மனதளவிலும் உயர்ந்தவணக்க சந்தோசபடுவான்.

ஒரு நாள், அவனுடைய கேள்விகளில் ஒன்றாக, வீட்டுக்கு முன்னால் காலியக விடப்பட்ட இடத்தை பற்றி கேட்டான். அவனுடைய அப்பாவும் அது கார் நிருத்துவதற்க்கு விடப்பட்ட இடம் என்பதை விளக்கினார். உடனே அங்கு நிருத்திவைக்க கார் வேண்டும் என அடம்பிடித்து, ஒரு சிறிய காரை வாங்கினான். அதுவும் பெரிதானவுடன் பெரிய கார் தர வேண்டும் என்ற சிறிய கட்டளையுடன் ஏற்றுக்கொண்டான். அதற்க்கு பின் அங்கு வேலை பார்ப்பவர்கள் அங்கு சைக்கிள் விடுவதே பெரிய விசயமாக ஆகிவிட்டது. அங்கு வேலை செய்பவர்கள் அவனை சின்ன முதலாளி என்றே செல்லமாக அழைப்பார்கள். சில நேரங்களில் தன் அப்பா யாரையாவது வேலை வாங்கும்போது இவனும் பெயர் சொல்லி அதட்டுவான். அவன் அப்பா மிரட்டினாலும், வேலைக்காறார்களின் ஆதரவு இவனுக்கு இருக்கும்.

பல நேரங்களில் அவன் தந்தையின் முதலாளி வருவார். கட்டட வேலைகளை மேற்பார்வை பார்த்துவிட்டு 'வாட்ச்மேன் நான் Engineerஐ பார்த்து சொல்லிவிட்டு போகிறேன். ஏதாச்சு problem இருந்தா சொல்லுப்பா' என்று கேட்டுவிட்டு சென்று விடுவார். அவர் சென்ற பின், கட்டிட வேலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும்.

இவன் விருப்பத்திற்க்கு ஏற்ப்ப, அறைகளின் உபயோகத்தை மாற்றி அமைத்துக்கொண்டான். ஹால், விளயாட்டு அரங்கம் ஆனது. - அவன் தத்ரூப விளயாட்டு அரங்கேரும் இடம். கார் ரேஸ் மட்டும் கார் பார்க்கிங்கிள் நடக்கும். பாத் ரூமும் ஸ்டோரூமும், பதுங்கும் இடமானது. - அவன் தந்தைக்கு தெரிந்தும் கண்டுபிடிக்க முடியாத இடம். படுக்கை அறை உணவு அறை ஆனது. - அவனால் தட்டும் தரையும் சம உரிமை பெறும் இடம்.

ஒரு நாள் அவன் உணவு அறையில் வேலை நடந்து கொண்டு இருந்ததால் வெளியில் சாப்பிட பணித்தனர். அவனிடமிருந்து மறுப்பே திரும்பி வந்தது. அறையின் ஒரு ஓரம் வேலை நிறுத்தப்பட்டு உணவு ஊட்டப்பட்டது. அந்த நேரம் அவன் தந்தையின் முதலாளி உட்பட அனைவருக்கும் அவன் மேல் சிறிது எரிச்சலே வந்தது.

கார் பார்கிங்கில் அவன் தந்தையின் முதலாளியின் கார் விட்டு சரிபார்த்த போது, அவன் தந்தையுடன் பெரிய யுத்தமே நடத்தி தோற்றுப் போனான். எளிதில் வெல்பவனுக்கு தோற்றதன் காரணம் புரியவில்லை.

வீடு குடிபோகும் நாளும் வந்தது. அனைவரும் அவன் தந்தையின் முதலாளிக்கு தெரிந்த்தவர்களாகவே இருந்தனர். இவன் குடும்பத்திற்க்கே வீட்டினுல் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. முதலாளி, அவர் குடும்பத்திற்க்கு சஸ்பன்சை உடைத்து புது வீட்டை அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்தார். அவர்கள் ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருந்தனர். இவன் ஆக்ரோஷமும் அழுகையுமாக பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் வீட்டை முதலாளி குடும்பத்தினர் ஆக்கரமித்துக்கொண்டார்கள் என்று. அவன் தந்தை அவனை கண்டிக்க ஆரம்பித்தார். முதலாளி வெளியில் வந்து அவன் தந்தையை பாராட்டிவிட்டு, புது துணிகலும் பணமும் கொடுத்துவிட்டு 'பையன் ஏன் அழரான்னு' கேட்டுக்கொண்டே, பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டார்.

இவர்களுக்கு உணவும் வெளியிலேயெ கொடுக்கப்பட்டது. உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற இவனுக்கு எதிராக, உணவு தினிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவன் அழுகையை நிறுத்த எடுத்த முயர்ச்சிகள் அனைத்தும் வீணாகிக் கொண்டு இருந்தது. அவன் தந்தை, இவனை வீட்டுக்குள் அழைத்துசென்ரால் கொஞ்சம் சமாதானம் ஆவான் என எண்ணினார். அவருக்கு தோன்றிய ஒரு வழி, அவனை கழிவறைக்கு அழைத்து செல்ல அனுமதி கெட்க்கலாம் என்பது.அதிலும் சிரியவர்கலுக்கான சலுகை அவனுக்கு எதிராக நின்றது. முதலாளி 'பெரிய ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்க, சின்ன பையந்தானே தெருவோரமாக போகட்டும்' என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
சிறுவன், முதலாளி பதவி பறிக்கப்பட்டு தெருவில் விடப்பட்டதை போல் உடைந்து போனான்.

கோடையில் மழை இல்லாததால், நகரத்துக்கு வேலைக்கு வந்த அவன் தந்தை, அடுத்த கோடையில் மழை வரும் என்ற நம்பிக்கையும், மகன் பக்குவம் அடைந்துவிடுவான் என்ற நம்பிக்கையும் இல்லாமல், யோசனையில் குடும்பத்தோடு ஊர் திரும்பினார்.


[Kindly forgive me for spelling mistakes. Due to tool I used for composing this and time, I couldn’t avoid spelling mistakes]

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

I am expecting more from you. Good attempt and all the best.