இலவசம், தமிழக அரசியலில் புழங்கிக்கொண்டு இருக்கும் வசீகரமான வார்த்தை. இந்த பதிப்பின் நோக்கம், இந்த இலவசத்தால் அரசியல்வாதிகளின் உண்மையான நோக்கம்தான் என்ன? எந்த அளவுக்கு இந்த சலுகை மக்களை போய்ச் சேர்கிறது. இதனால் பயனடைவது மக்களா / அரசியல்வாதியா / அவரை சார்ந்தவர்களா என்பது அல்ல. அதனுடைய பலன் ஒரு ஏழையின் முன்னேற்றதிர்க்காவாவது போய்ச் சேர்ந்தாலும் சந்தோசம்தான்.
நான் பார்த்த சில அனுபவத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
என் பக்கத்து வீட்டு அண்ணன் சென்னைக்கு சித்தால் வேலைக்கு சென்று, சம்பாதித்து, முதல் கட்டமாக தன்னுடைய கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்றினார். மனைவி, குழந்தைகளை விட்டு, கொசு கடியில் ரோட்டோரம் டென்ட் போட்டு வாழ்ந்து, கொளுத்தும் வாயிலில் வேலை செஞ்சு சம்பாதித்து கட்டிய வீடு. அதனை முழுமையாக அனுபவிக்கும் முன், இலவச வீடு திட்டம் வந்தது. தான் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பார் என எண்ணியவருக்கு ஏமாற்றமாக போனது.
கூரை வீட்டை மாற்ற உழைத்தவன் ஓட்டு வீட்டில் இருக்கிறான். மற்றவர்கள் மெத்தை வீட்டுக்கு வந்துவிட்டார்கள். உழைத்து கட்டிய வீட்டில் இருக்கிறோம் என திருப்த்தி இருந்தாலும், அன்புள்ள முதல்வருக்கு, அழகான வீட்டுக்கு ... என இலவச டிவியில் அடிக்கடி பார்க்க நேரும்போது மனம் லேசாக கனக்கத்தான் செய்கிறது அவருக்கு. சிறிது பொறுத்திருந்தால் இலவச வீடும் கிடைத்து இருக்கும் என. (ஓட்டு வீட்டுக்கு இலவச வீட்டு திட்டம் கிடையாது.) சம்பாதித்த பணத்தை வேறு எதுக்காவது உபயோகித்திருக்கலாம். என்ன செய்வது உணவுக்கு அப்புறம் உடைக்கு சொல்லும்படியாக செலவு செய்யாவிட்டாலும் உறவிடம்தான் அடுத்து உள்ளது.
இதை போல்தான், கஷ்டப்பட்டு கால்காணி நிலம் வாங்கியவன் இலவசமாக 2 ஏக்கர் நிலம் வங்கியவனை எட்டிப்புடிக்க முடியாமல் இருக்கிறான். கஷ்டப்பட்டு விவசாய கடனை அடைத்தவன், கடன் தள்ளுபடி ஆனவனின் ஏலனத்திர்க்கு பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறான்.
அரசு ஒரு பக்கம் எப்படி எல்லாம் இலவசம் தரலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறது. சம்பாதிக்க ஆரோக்யமான போட்டிப்போட்ட மக்களும், இப்போது இலவசங்களைப் பெற தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறார்கள். கால் ஊனமாக இருப்பவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றால் நொண்டி நடக்கத்தான் செய்கிறார்கள். கடைசி ஏழை இருக்கும் வரைக்கும் இலவசங்கள் தொடரும் என்பது நல்ல விசயம்தான். ஆனால் கடைசி இலவசம் இருக்கும் வரை ஏழை ஏழையாகத்தான் இருக்க விரும்புவான் என்பது யோசிக்கவேண்டிய விஷயம்.
இந்த காலத்தில் தரமான வாழ்க்கை வாழ அதிகமாக பணம் தேவைப்படுவதால், மக்கள் இல்லவசமாக எது வந்தாலும் வாங்கத்தான் செய்கிறார்கள். இலவசத்திர்க்கும் உணமையான விலைக்கும் வித்தியாசமும் எட்டிபிடிக்கும் அளவிற்க்கு இல்லை. இலங்கை தமிழர்கள் படுகொலையை தடுக்காமல், வாழ்க்கையை, உறவை இழந்த இலங்கை தமிழர்களுக்கு உதவியது போல விலைவாசி உயர்வை கட்டுபடுத்தாமல், விவசாயின் உற்பத்தி பொருளுக்கு சரியான விலையை நிர்ணயிக்காமல் இலவசம் வழங்கிக்கொண்டு இருக்கிறது அரசு.
கவர்ச்சியான திட்டங்கள், வாக்கு வங்கியை நோக்கி சலுகைகள், ... என அரசின் திட்டங்கள் லாட்டரி சீட போல இருக்கிறது. லாட்டரியை கூட தடை செய்துவிட்டார்கள். படிக்காதவனுக்கு தரமான படிப்பும், படித்தவனுக்கு வேலையும் இலவசமாக கிடைத்தால் போதும். அவரவர் தேவையை அவரவர் பார்த்துக்கொள்வார்கள்.
ஊனமுற்றவர்களுக்கு கூட இட ஒதுக்கீடும், சலுகைகளும்தான் இருந்துக்கொண்டு இருந்தது. ஏழைகளுக்காகத்தான் இலவசங்கள் வர ஆரம்பித்தது. உணமுற்றவர்களையும் உழைக்க வழி வகை செய்த அரசெல்லாம் மாற்றி, இலவசம் கொடுத்து ஏழைகளை ... மாற்றிக்கொண்டு இருக்கிறது.
தரமான திட்டங்கள் வராமல் இதுப்போல திட்டங்களே பெருகிக்கொண்டிருந்தால் ஒரு நாள் அரசியல்வாதியின் சுய விள்ளம்பரத்திர்க்காக, இலவசத்தாலியில் கூட முதல்வரின் முகத்தை அச்சடித்து கொடுத்தாலும் கொடுப்பார்கள். நாமும் இல்லவசமாக வருவதை ஏன் விட வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வந்தாலும் வரும்.
இன்னும் சிலர்அரிசி கொடுத்தார்கள். குழம்புக்கு? டிவி கொடுத்தார்கள். cable connection? தாலி கொடுக்கிறார்கள். பெண்ணுக்கு? என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் கொடுத்தாலும் சாப்பாட்டுக்கு போரியல், டிவியில் sports, movie channel, ........ என கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இலவசம் வாங்கும் அளவிற்க்கு நாமும் ஒன்றும் கேவலமாக மாறிவிடவில்லை. இருப்பவர்களின் வரிப் பணம், இல்லாதவருக்கு உதவியாக போவதை யாரும் மறுக்கமாட்டார்கள். நானும் பலரின் வரிப்பணத்தில் படித்தவன்தான் (Goverment aided school). நான் படித்த ஆரம்பப் பள்ளியில் நான் இருந்தபோது இருந்த அளவிற்க்கு இப்போது ஆசிரியர்கள் இல்லை. அனால் அப்போது இருந்ததைவிட நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள். ஆசிரயர் பயிற்சி முடித்து பலர் இலவசம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அது இலவசமாக இல்லாமல் சம்பளமாக கிடைத்தால், மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும்.
அரசு செய்வதற்கு நிறைய உள்ளது. எல்லாம் அரசு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது என வாதிடுவார்கள். எவனையாவது நிறுத்தி, அரசிடம் இருந்து என்ன எதிர்ப்பார்க்கிறாய் என கேட்டுப்பாருங்கள். இலவசத்தை தவிர எத்தனை பட்டியலிடுகிறான் என்று. அதில் முக்கால்வாசி இந்த சமூகத்தின் தேவையாகத்தான் இருக்கும்.
அதிகமாக சம்பாதிப்பனவன் கூட, ஒரு ரூபாய் பிச்சைப் போட்டால் உண்மையாகவே முடியாயதவனா என ஒரு நொடி யோசித்துவிட்டுப் போடுகிறான். மக்களின் வரிப்பணத்தை எடுத்து சிலரின் அரசியல் நோக்கத்திற்க்காகவும், சுய விளம்பரத்திர்க்காகவும் வீணடிக்கப்படக்கூடாது. சொந்த பணத்தில் அன்னதானம் போடுபவன்கூட விளம்பரம் இல்லாமல் போடுகிறான். அரசின் பணத்தை வீணடிப்பவன் எல்லா வகையிலும் விளம்பரப்படுத்திக்கொள்கிறான்.
தரமான திட்டங்கள் வராமல் இதுப்போல திட்டங்களே பெருகிக்கொண்டிருந்தால் ஒரு நாள் அரசியல்வாதியின் சுய விள்ளம்பரத்திர்க்காக, இலவசத்தாலியில் கூட முதல்வரின் முகத்தை அச்சடித்து கொடுத்தாலும் கொடுப்பார்கள். நாமும் இல்லவசமாக வருவதை ஏன் விட வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வந்தாலும் வரும்.
இன்னும் சிலர்அரிசி கொடுத்தார்கள். குழம்புக்கு? டிவி கொடுத்தார்கள். cable connection? தாலி கொடுக்கிறார்கள். பெண்ணுக்கு? என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் கொடுத்தாலும் சாப்பாட்டுக்கு போரியல், டிவியில் sports, movie channel, ........ என கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.
மக்களின் பேராதரவுடன் அரசியல் சாக்கடையில் வளரும் இலவச கிருமியை மக்களிடம் விழுப்புணர்வில்லாமல், அரசியல்வாதிகளிடம் தொலை நோக்குப் பார்வை இல்லாமல் தடுக்க முடியாது.
2 கருத்துகள்:
தேவையான நேரத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துகள். யோசிக்க வேண்டிய, மறுதலிக்க வேண்டிய இலவசங்கள் என்பது உண்மை.
நன்றாக, தன் பார்வையை சிறப்பாக வெளிப்படுத்திருக்கும் பதிவு.
தொடரவும்.
I could stand in your feet.
I acknowledge your thoughts. It is time to act before the freebies prove costly.
கருத்துரையிடுக