அண்ணனை மாற்றி, கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள வைத்துவிடலாம் என்ற எண்ணம் முற்றிலும் தேய்ந்துபோக, வீடுகட்டும் வேலை ஓரளவிற்கு முடிந்துபோக, ஒரு வழியாக எனக்கு பெண் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். எங்காவது தெரியாத இடத்தில் பார்த்து மாட்டிக்கொள்ளவேண்டாம் என தெரிந்த இடங்களில் விசாரிக்க ஆரம்பித்தார்கள். எங்களுக்கு தெரிஞ்ச இடத்தில், ஏதும் இல்லையென சொல்லாமல், வழக்கம் போல, நல்ல இடமெல்லாம் இருந்துச்சு, இப்பதான் முடிஞ்சுது என்ற பதில் பலரிடம் இருந்து வந்தது. தெரிஞ்சவங்களுக்கு தெரிஞ்சவங்க என மூனு நாலு level வரைக்கும்போய்ட்டு அதே பதிலுடன் திரும்பிவந்தது. வீட்டில் எதாச்சு காதல் செய்ய வேண்டியதுதானே, தேடர வேளை குரைஞ்சிருக்கும் என்றார்கள். என்ன பண்றது நல்ல பிள்ளையாகவே வளந்துட்டேன் என பதில் கூறி சமாளித்தேன்.
அடுத்த கட்டமாக, matrimonial site, சங்கங்கள் என பதிவு செய்துவைத்தோம். இருவரின் விருப்பத்திற்கு பிறகு, பெண்ணைப்பற்றி விசாரித்து முடிவுசெய்துக்கொள்ளலாம் என. அனைவரும் தேடலில் ஈடுபட்டதால், என்னுடைய விருப்பத்தை கேட்டனர். முதல் முறையாக இதைப்பற்றி பேசுவதால், உண்மையில் வெட்கப்பட வேண்டிய இடம்தான். வெட்கத்தோடு, பொண்ணு ஒல்லியாக, நிறம் கருப்பா இருந்தாலும் கலையாக, ஏதாவது degree படித்து இருக்கவேண்டும். மற்றபடி? மற்றபடி ஏதும் இல்லை. ஜாதகம், வசதி, வரதட்ச்சணை ??? ஜாதகம் - எனக்கு நம்பிக்கை இல்லை. வசதி - பெண் வீட்டாரின் வசதியை நம்பி நான் இல்லை. வரதட்ச்சணை - எதுவும் வேண்டாம், எடுத்துவந்தால் அவர்கள் எடுத்துவந்தது என்ற எண்ணம் எப்போதும் இருக்ககூடாது. என் விருப்பம்தான் கடைசி முடிவு என அழுத்தமாக அனைவரும் சொன்னார்கள். சுலபமாக முடிந்துவிடும் போல என நினைத்தேன்.
ஆயிரக்கணக்கில் பெண்கள், matrimonial site -ல் பதிந்து இருக்க, எனக்கு பிடித்த பெண்களுக்கெல்லாம் விருப்பத்தை தெரிவித்து அனுப்பினேன். வேலை தேடுவதுபோல் - அடிக்கடி profile update செய்யவேண்டும். ஓரளவிற்கு பொருந்தினாலும் interest அனுப்பி பார்க்கவேண்டும். சில பெண்கள் எத்தனை பேர் interest வருகிறது என பார்ப்பார்கள் போல. 3 or 4 மாதம் ஆகியும் பதில் வராது. reject ஆச்சு பண்ணலாம் இல்லன்னு தோன்றும். தினமும் இரவில் matrimonial website களில் பெண் தேடுவது ஒரு நல்ல வேலைதான்.
எனக்கும் சில interest வந்தன. எனக்கு பிடிக்காததால் உடனே மறுப்பு பதில் அனுப்பினேன். எனக்கும் அதுபோல் பல மறுப்பு பதில் வந்தன. முதலில் கஷ்டமாக இருந்தாலும் நிறைய rejection வர வர பழகிவிட்டது. நல்ல சம்பளம் இருந்தாலும், வயது 30+, அண்ணன் பிரம்மச்சாரி, கிராமத்து பூர்விகம், average person ஆகியவை என்னை மறுப்பதற்கு முக்கிய பங்கு வகித்தன. சிலவற்றை மறைக்கலாம் (மாற்றலாம் அல்ல) என சிலர் கூறியும் அதில் எனக்கு விருப்பம் இல்லை. அப்பா இத காரணமாவச்சு, அண்ணனை திருமணம் செய்துக்கொள்ள சொல் என்றார். நீங்ககூட படிக்கலன்னு சில பேர் வேண்டாம்னு சொல்றாங்க. அதுக்காக உங்கள இந்த வயசுல படிக்க சொல்லமுடியுமா? என பதில் அளித்தேன். கெட்ட பழக்கமாக இல்லாத நிலையில், நம்மை மாற்றுபவர்களும் வேண்டாம், நமக்காக அவர்களை மாற்றிக்கொள்பவர்களும் வேண்டாம் என இருந்தேன்.
எனக்கும் பெண் வீட்டாருக்கும் பிடித்தாற்போல் இரண்டு profile வீட்டுக்கு எடுத்து சென்றேன். போட்டோ, வசதி இவைகளைபார்த்தே எங்கள் வீட்டில் சில நிமிடங்களில் மறுத்துவிட்டார்கள். என் விருப்பம் என்பது ஒப்புக்கு சொல்லப்பட்டது என்பது அப்போதுதான் உணர ஆரம்பித்தேன்.
என் பெற்றோர்களுக்கு பெருத்த எதிர்பார்ப்பு இருப்பதாக தெரிந்தது. ஒரு நல்ல இடத்திலிருந்து பெண்ணை பார்க்கவேண்டும் என்று. இங்கு 'நல்ல' என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. வரதட்ச்சனை எதிர்பார்க்காதவர்களாக இருந்தாலும், பெண் வீட்டார் பணக்காரர்களாக, பண்பானவர்களாக இருக்கவேண்டும் என எண்ணினார்கள். எங்க அம்மாவுக்கு இந்த எதிர்பார்ப்புக்கு பின் எந்த கதையும் இல்லை. எங்க அப்பாவிற்கு, அவரின் பணக்கார எதிரிக்கு இருந்த ஒரே பெண்ணை என் அண்ணனுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அண்ணனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதால் அதற்க்கான முயற்ச்சி செய்ய முடியாமலே போனது. அந்த ஆசைக்கு தகுதியானவர்தான் எனகாட்டிக்கொள்ள, எனக்கும் அதே அளவிற்கான குடும்பத்தில் பெண், அதே மாதிரி நல்ல நிறத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். என் அம்மாவும் பெரிய இடத்தில் இருந்து வந்ததால், அவர்களுக்கு இணையாக தன்னை உயர்த்திக்கொள்ள போராடி இந்த நிலைமைக்கு வந்தார். அதனால் பெரிய இடத்தில் திருமணம் செய்துக்கொண்டால் நானும் அடுத்த level -கு போராடுவேன் என அவருக்கு நம்பிக்கை. அண்ணனுக்கு அனைத்தும் இருக்கும் இடத்தில் பெண் பார்த்தால் எனக்கு அவர்களால் எந்த கூடுதல் பளுவும் வராது என நம்பிக்கை. என் தம்பிக்கு என்னுடைய விருப்பத்தை தவிர எந்த புதிய திணிப்பும் கொடுக்க விரும்பவில்லை.
லவ் பண்ணியா, உனக்கு புடிச்சா போதும் என பேசிவிட்டு, இப்ப கருப்பா இருக்கு, வசதியா இல்ல, அப்பா நல்ல வேலையில இல்ல, தூரமா இருக்கு, வீட்ல எல்லாம் பொண்ணா இருக்குன்னு, ... சில எதிர்பார்ப்புக்கள் வீட்டோட மாப்பிளைக்கு பார்ப்பதுபோல் இருந்தது. (என்னுடைய எதிர்பார்ப்பு பெண்ணை பற்றி மட்டும் இருந்தது.) வீட்டில் சிறு சண்டைக்கு பிறகு, இனிமேல் நீங்களே எல்லாவற்றையும் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றேன். என்னுடைய தொலை பேசி எண்ணை எடுத்துவிட்டு அண்ணனுடைய எண்ணை பதிவு செய்தேன். சில மாதங்களுக்கு பின், எங்களுக்கு என்னப்பா தெரியுது, நீயே பாரேன் என்று பெற்றோர்கள் சொல்ல. தம்பி வெளிநாட்டில் இருக்க, அண்ணன் வேலை பளுவில் இருக்க, சில நிபந்தனைகளுடன் திரும்பவும் நான் பார்க்க ஆரம்பிதேன். எனக்கு பிடித்த profile (appearance , படிப்பு) தொலைபேசி எண்களை பெற்றோர்களிடம் கொடுத்தேன். அவர்கள் விசாரித்துவிட்டு (வசதி, ஜாதகம்) எனக்கு முடிவுசொல்வார்கள் .
அதில் ஒரு profile இரு வீட்டாருக்கும் பிடித்திருக்க என்னிடம் வந்தது. நானும் அவர்களுடைய மற்ற விவரங்களையும் கணினியில் சேகரித்துக்கொண்டு வீட்டில் கொடுத்தேன். அதனிடையே என்னுடைய நெருங்கிய நண்பரின் நண்பர் அந்த பெண்ணிற்கு 4+ வருடமாக manager அக இருப்பது தெரியவர, அவரிடமிருந்து பெண்ணை பற்றி நல்ல அபிப்ராயங்கள் வர, நானும் ஓரளவிற்கு மனதில் கற்பனை வளர்த்துக்கொண்டபிறகு, ஜாதகம் பொருந்தவில்லை, வேண்டாம் என வீட்டில் இருந்து செய்தி வந்தது. ஜாதகம் எனக்கு தேவை இல்லாதது, அதற்காக ஒரு நல்ல பெண்ணை தவிர்க்க விரும்பவில்லை என போராட, குரு பெயர்ச்சி வரும்வரை என்னை பெற்றோர்கள் காத்திருக்க சொன்னார்கள்.
இரண்டு வாரம், கொஞ்சம் அதிகமான காலமாக தெரிந்தது. இதனிடையே ஒரு நாள் வீட்டுக்கு போக அவர்கள் வேறு இரண்டு பெண்களின் photo என்னிடம் காட்டினார்கள். புரியாமல் அந்த பெண் என்ன ஆனது என கேட்டேன். அது வேண்டாம் என பதில் வந்தது. உடனே, அந்த பெண்ணின் அக்கா ஒரு கிருஸ்துவ பையனை காதிலித்து திருமணம் செய்துக்கொண்டார்கலாமே. ஏன் என்னிடம் இருந்து மறைத்தீர்கள் என என்னை கேட்டார்கள். எனக்கு தெரிந்த விஷயம், என் பெற்றோர்களுக்கு தெரியாது என்பது அப்போதுதான் எனக்கு தெரிந்தது. குடும்பத்தை பற்றி விசாரித்ததில், இருக்கும் ஒரே ஒரு அக்காவின் திருமணத்தை பற்றி விசாரிக்காமல் என்ன செய்தார்கள் என தெரியவில்லை. இப்ப எல்லாம் 4 வீட்டுக்கு ஒருத்தன் லவ் பண்றான், அதெல்லாம் பெருசில்ல. அப்படியே இருந்தாலும் அக்காவின் காதலுக்கு அவள் என்ன செய்வாள் என புரியவில்லை.
சில நிமிட சண்டைக்குபிறகு (அழுகை, செண்டிமெண்ட், மிரட்டல் என திரையில் பார்க்கும் அனைத்து வழிமுறைகளையும் என் பெற்றோர்கள் பயன்படுத்திவிட்டர்கள்), நான் தெரியாத ஒரு பெண்ணிற்க்காக என் வீட்டில் போராடிக்கொண்டு இருக்கிறேன் என உணரமுடிந்தது. என்னை சமாதானப்படுத்திக்கொண்டு, தெரியாத பெண்ணிற்க்காக உங்களிடம் சண்டை போட விரும்பவில்லை. அக்கா லவ் பன்றதிலிருந்து, ஜாதகம் வரைக்கும் எல்லோரும் பார்க்கறத பார்க்கறிங்க. அதே நேரத்தில் லவ் பண்ணவேண்டியதுதான, உனக்கு பிடிச்சா சரிதான்- னு broadminded people போல நடிக்காதிங்கனு சொல்லிவிட்டு கோபத்தோடு நகர்ந்தேன். சென்னை போகும் முன் atleast பொண்னுவீட்டுக்காவது விபரம் சொல்லுங்க. அவுங்கலாவது உங்களுக்காக காத்திருக்காம அடுத்தத பார்ப்பாங்க என சொல்லிருந்தேன்.
ஒரு சில தினத்தில் பெண் வீட்டிலுருந்து என்ன ஆச்சுனு என்னிடம் தொலைபேசியில் கேட்டார்கள். அந்த பெண்ணை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு எனக்கு மனதில்லை. நான் வீட்டில் இன்னும் கேட்க்கவில்லை என சொல்லிவிட்டு உடனே பெற்றோர்களிடம் ஏன் சொல்லவில்லை? என கேட்டேன். ஏதும் சொல்லலைனா இந்த விசயத்துல புரிஞ்சுக்குவாங்கப்பா என்றார்கள். பொதுவான bad assumption. தயவுசெஞ்சு சொல்லிடுங்கனு வெறுப்போடு பதிலளித்தேன்.
பெற்றோர்களிடமிருந்து பதற்றமான குரலில் phone வந்தது. அவுங்க கோபமா பேசறாங்கப்பா, எதாச்சு உன்ன பண்ணிடப்போராங்கனு. நடிக்காதிங்க, எனக்கே 15 நாள் காத்திருக்க சொல்லி பதில் இல்லையென்றால் கோபம் வரும். அதுவும் நீங்க மிகைப்படுத்தும் அளவிற்கு மோசமான ஆளுங்களா எனக்கு தெரியலன்னு அவர்களுக்கு phone செய்தேன். ஜாதகம் பிரச்சனை என்றால் முதலிலேயே தெரியம் இல்ல அப்பவே சொல்லிருக்கலாம் என்றனர். 15 நாள் வீண்தான என ஏமாற்றமான குரலில் சொன்னார்கள். வீட்டின் மேல் வெறுப்பு அதிகமானது.
வீட்டாரின் சோகம் பலரின் மூலமாக என்னிடம் வந்து சேர்ந்தது. சிலர் அறிவுரை கூறினார்கள். நான் என்ன தப்பா செஞ்சேன். அப்படியே இருந்தாலும் அவர்களுக்காக விட்டுகொடுத்துட்டுதான வந்தேன். தோல்வி என்னோடது, கொஞ்சமாவது feel நான் பண்ணனும். கொஞ்சம் நாள் விடுங்க நானே சரியாகிவிடுவேன் என பதிலளித்தேன்.
சிலர், ஜாதகம் ஒன்னும் பெருசில்ல இந்த காலத்துல என support செய்தனர். உறவின சகோதரர் ஒருவர் அக்கா லவ் பண்ணதுக்கு வேண்டாம்னு சொல்றாங்க, கல்யாணத்திற்கு அப்புறம் அந்த பொண்ணுக்கு தங்கச்சி இருந்து, அவ லவ் பண்ணா divorce செய்ய சொல்லுவாங்களா என்றார். அத எங்க வீட்ல சொல்லுங்கன்னு ஆறுதல் அடைந்துக்கொண்டேன். ஜாதகம், ஜாதி, வசதி எல்லாம் பார்க்காம திருமணம் செய்துக்கொல்லனும்னு என் வாழ்க்கையில தெரிந்துகொண்ட சில நல்ல (எனக்கு) விஷயங்கள். இன்று என்னாலயே அதை செயல்படுத்தமுடியவில்லை எனும்போது அறிவிருந்தும் முட்டாளாக இருக்கவேண்டி இருக்கிறது. கோயில் மேடையில் செருப்பு அணிந்து நிற்கும் என் அண்ணனே ஜாதகம் பொருந்தவில்லை என பேசுகிறான். எல்லாமே என் நல்லதுக்குதான் என என் விருப்பத்திற்க்கு எதிராக என்னை நடக்க சொல்லும் பெற்றோர்கள். என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதிகம் தம்பியிடம்தான் பொலம்புவேன். அவன் suggest செய்த ஒன்று - பெற்றோர்களுக்காக காதலை தியாகம் செய்தவர்கள், காதலுக்காக பெற்றோர்களை தியாகம் செய்தவர்கள் - நீயா நானா நிகழ்ச்சி. உணர்வுபூர்வமான நிகழ்ச்சி. இவ்வளவு கதை எழுததேவை இல்லை, அதை பார்த்தாலே புரியும்.
தொடரும் ....

1 கருத்து:
தம்பி..கதை சுவாரசியமாக இருக்கிறது. என்னதான் முடிவு..? அடுத்த பாகத்தை சீக்கரமாக எழுதவும்.
கருத்துரையிடுக